எம்.பி.பி.எஸ்., சேர 25,000 பேர் விண்ணப்பம் !

சென்னை:தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 25 ஆயிரத்து, 470 பேர் விண்ணப்பித்துள்ளனர். தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ.,
கல்லுாரிகளையும் சேர்த்து மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. நுழைவுத்தேர்வு தொடர்பான சிக்கல் தீர்ந்து, மே, 26 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு இறுதி நாளான நேற்று மாலை வரை, 25 ஆயிரத்து, 470 விண்ணப்பங்கள், மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.



இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:

மொத்தம், நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், 28,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. விண்ணப்பங்கள் சமர்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், 25 ஆயிரத்து, 470 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. தரவரிசை பட்டியல், இம்மாதம், 17ம் தேதியும், முதற்கட்ட சேர்க்கை கலந்தாய்வு, 20ம் தேதியும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...