னியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த சட்டங்களை
தனியார் கல்வி நிறுவனங்கள்
பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. அதோடு ஏழை எளிய பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிப்பும் கன ஜரூராக நடக்கிறது என்று கொதிக்கிறார்கள்
கல்வியாளர்கள். ஏற்கெனவே தரமான கல்வியை தரமுடியால் அரசு திணறி வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், நடைமுறையில் உள்ள சட்டங்களை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள் என்றும் பலமாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

சட்டம் என்ன சொல்கிறது ?
தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 - ன் படி தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத இடஒதுக்கீடு குறித்த தகவல்களை அறிவிப்புப் பலகையில் தெரிவிக்க வேண்டும். இவற்றைப் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமெனவும் கூறுகிறது கல்வி உரிமைச் சட்டம். பள்ளிக் கல்வித்துறை 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி பயிலும் மாணவர்களின் பட்டியலை காலந்தோறும் பராமரித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கோருகிறது. மேலும் மத்திய - மாநில அளவில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கவும் இச்சட்டப் பிரிவுகள் 33 மற்றும் 34 -ல் வழி செய்துள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பள்ளிகளின் வங்கிக் கணக்கில் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியும் ஆண்டு இறுதியில் மாணவர் வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையையும் பள்ளிகள் வழங்கிய பிறகு எஞ்சிய தொகையை பள்ளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும் இது தான் கல்வி உரிமைச்சட்ட நடைமுறை.
மறுக்கப்பட்ட கல்வி!
2013-2014 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் 25 சதவீத இடஒதுக்கீடு படி 3550 பள்ளிகளில் 58,619 இடங்கள் இருந்தன. இதில் 23248 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.அதாவது தகுதியுடையோரால் 60 சதவீத இடங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த 60 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை . இந்த 40 சதவீத இடங்களுக்கே மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கவில்லை என்று தெரிவிக்கிறது. ஆவணங்கள் . 2009 -- ல் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் 2011 -ல் தான் தமிழகத்தில் அதன் செயல்பாடுகள் தொடங்கியது என்று சொல்லாம். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளில் ஓதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை ? எத்தனை இடங்கள் மாணவர்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தெளிவான எந்த விவரமும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். இதில் அரசு வெளிப்படையாக இல்லாமல் இருப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமை மறுக்கபட்டுள்ளதற்கான உறுதியான ஆவணங்கள் இதுவே என்கிறார்கள்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு பிரதிநிதியிடம் பேசியபோது பெரும்பாலான மாவட்டங்களில் கிராமப் புற மக்கள் இதுபோன்றதொரு இட ஒதுக்கீடு கல்விமுறை இருக்கிறதா ? என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர்.அப்படியே ஒரு சிலருக்கு தெரிந்து சேர்க்க சென்றால் அவர்களுக்கு பள்ளிகள் விண்ணப்பங்கள் கொடுப்பதில்லை. இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொடுத்தாலும் அதற்கு 'அக்னாலெட்ஜ்மெண்ட் கார்டு' கொடுப்பதில்லை. ஒருவழியாக போராடி மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அவர்களிடம் கட்டணம் கண்டிப்பாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 20 பேர் சேர்க்கும் இடத்தில் 30 விண்ணப்பங்கள் வரும் . அந்த விண்ணப்பங்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய வேண்டும் அல்லது வருமானத்தின அடிப்படையாக வைத்தே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த நடைமுறையும் இங்கு இல்லை. பள்ளி நிர்வாகம் யாருக்கு கொடுக்க விரும்புகிறதோ அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். இது தான் அனைத்து தனியார் பள்ளிக் கூடங்களிலும் நடக்கிறது. கல்வி உரிமைச் சட்ட விதிமுறை என்பது ஏழைகளை ஏமாற்றும் செயல்.
சாரா ரம்யா .( கல்வி உரிமை செயற்பாட்டாளர்)!
கல்வி உரிமைச்சட்டம் வெறும் சட்டமாகதான் இன்று வரை உள்ளது . இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்குவதில்லை.அப்படியே அந்த சட்டத்தை பின்பற்றினாலும் ஏற்கெனவே ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருவார்கள் .அவர்களை இந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விடுவார்கள். அப்படியே சென்றாலும் அந்த கல்வி நிறுவனங்கள் ஏழை குழந்தைகளின் பெற்றோர்களை நடத்தும் நடவடிக்கை மிக மோசமானவை . ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் துறையில் உள்ள மாணவர்கள் இந்த கல்விச் சட்டத்தை பயன்படுத்த முடியாது . சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கி விடுவார்கள் ஆனால் அந்த குழந்தைகள் இங்கு படிக்க முடியாத நிலை உள்ளது. காரணம் அந்த குழந்தைகளிடம் கட்டணம் மட்டுமே வசூலிக்க மாட்டார்களே தவிர . சிறப்புக் கட்டணம் , பேருந்துக் கட்டணம்,உடை வாங்க வேண்டும் , இந்த 'புராஜெக்ட்' செய்ய வேண்டும் என்று கூறி வசூலிக்கும் கட்டணத்தால் சீட் கிடைத்தாலும் பெற்றோர்கள் இந்த பள்ளிகளை நாடுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். எடுத்துக் காட்டாக கொடைக்கானல், ஊட்டி போன்ற தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டால் அந்த மாணவர்கள் கல்வியை முழுமையாக முடிக்கவிடாமல் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள் பெற்றோர்கள் . அரசின் தீவிர கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏழைகள் பயன்படுத்த முடியும்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு (கல்வியாளர்)
இந்தக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களிடம் சில தனியார் பள்ளிகள் கட்டணத்தை கட்டிவிடுங்கள் அரசு எங்களுக்கு செலுத்திய பின்பு உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம் என்று வாங்கி விடுகிறார்கள் . உண்மையில் அந்தக் கட்டணத்தை மீண்டும் மாணவரின் பெற்றோருக்குக் கொடுக்கப்பதில்லை. இது புறம் இருந்தால் சில பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் பிற காரணங்களை காட்டி மாணவர்களிடம் பணம் வசூலித்து விடுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளிகள் சார்பில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள் என்ற அட்டவணை மட்டும் அரசுக்கு அனுப்பப்படும் அந்த அட்டவணையில் உள்ளபடி உண்மையில் சேர்க்கப்பட்டார்களா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது. இதை அரசின் பள்ளிக் கல்வித்துறை தான் ஆய்வு செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள கல்வி மாவட்டங்களுக்கு ஏற்றவாறு ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ,பெற்றோர்கள் அந்ததந்த பகுதியில் உள்ள கல்வியியல் செயல்பட்டாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆண்டு தோறும் மாணவர் சேர்ப்பிற்கான் மையம் அமைத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்தக் குழுவே அந்தந்த கல்வி மாவட்டத்திலும் கண்காணிப்பு குழுவாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளுக்குச் சென்று இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்த நடைமுறையை அரசு கொண்டு வந்தால் மட்டுமே ஓரளவு இந்த சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை விட அரசு எப்போது தனது பள்ளிகளைத் தரம் உயர்த்த போகிறது? தரமான கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றால் அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்தாமல் கல்வியை, ஏழைகளுக்கான கல்வியை முழுமைப் படுத்த முடியாது. இதை எப்போது இந்த அரசு செய்யப்போகிறது ? எப்போது விழிக்கப் போகிறது அரசு ?
-கே. புவனேஸ்வரி