குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு !

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:



 குரூப்-4 பிரிவில் தட்டச்சு பணியில், 314 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2014 -ஆம் ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்காக 481 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதவ் சரிபார்ப்பிற்கு கலந்துக்கொள்ளத்தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...