அமைச்சர்களுக்கு 6 மாதம் கெடுவிதித்த முதல்வர்!

அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்படுவதை நிரூபிப்பதற்காக, இனி ஆறு மாத காலத்திற்கு அமைச்சரவை மாற்றம் கிடையாது' என அ.தி.மு.க தலைமை உறுதியாகக் கூறிவிட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார்கள் அமைச்சர்கள். அ.தி.மு.க
தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பிறகு, கட்சிக்குள் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. புதிதாக அமைச்சர் பதவியேற்ற ஈரோடு கருப்பண்ணன், கரூர் விஜயபாஸ்கர், ராமநாதபுரம் மணிகண்டன் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் வழங்கி இருக்கிறார் முதல்வர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " கடந்த ஆட்சியில் அமைச்சர்களின் செயல்பாடுகளில் திருப்தி அடையாததால், அடிக்கடி அமைச்சரவை மாற்றம் நடந்து வந்தது.


இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. இந்தமுறை ஆட்சிக்கு வந்ததும், துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர், ' அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் திறமையை வெளிப்படுத்தும்விதமாக செயல்பட வேண்டும். துறையின் அதிகாரிகளும் அமைச்சர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' எனப் பேசியிருக்கிறார். இதை அதிகாரிகளும் அமைச்சர்களும் நம்ப முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கடந்த ஆட்சியில் முழுக்க அதிகாரிகளின் ராஜ்ஜியம்தான் நடந்தது. இதனால் பல அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சிறப்பாகச் செயல்பட முடியாமல் தடுமாறினார்கள். 'இந்தமுறை அப்படி இருக்கக் கூடாது' என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். புதியவர்களுக்கு அமைச்சர் பதவியோடு மா.செ பதவியும் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், தொகுதிக்குள் கட்சியை வளர்ப்பதில் தீவிர அக்கறை செலுத்துவார்கள் என அம்மா உறுதியாக நம்புவதால்தான்.
இந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அமைச்சர்களின் பொறுப்பு. இதில்,
தவறு செய்யும் அமைச்சர்கள் மீது, ஆறு மாதங்களுக்குப் பிறகு அதிரடி நடவடிக்கை இருக்கும் என்று வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது
. அதே சமயம் இதுவரையில் இல்லாத அளவுக்கு துறை அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர்" என்றார் அவர். ஆறு மாதம் அமைச்சர் பதவி நீடிக்கும் என்பதே பல அமைச்சர்களை நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்த்தியிருக்கிறது. 'இது வெறும் வாய்மொழி உத்தரவாதம் மட்டும்தானா... இதை நம்பலாமா?' என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...