சிபாரிசு இருந்தால் 'சீட்'விதி மீறும் கல்லூரிகள் !

தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும் உள்ளன.


இவற்றில், அரசு கல்லுாரிகளை விட, அரசு உதவி பெறும் கல்லுாரிகளும், தனியார் கல்லுாரி களும், கல்வித் தரத்தில் உயர்ந்திருப்பதால், அவற்றில் சேர மாணவ, மாணவியர் மத்தியில் போட்டி நிலவுகிறது.



பி.காம்., - பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், பயோ டெக்னாலஜி, போன்ற படிப்புகளுக்கு, அதிக மவுசு உள்ளது. சிபாரிசு கடிதங்களும், அரசியல்வாதி கள், கல்வி அதிகாரிகளின் மறைமுக உத்தரவுகளும், மாணவர் சேர்க்கையில் முக்கிய இடம் பிடிக்கின்றன. ஒவ்வொரு கல்லுாரியும், பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை, தினசரி காலியிடம், கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரத்தை, இணையதளத்தில் தினமும் வெளியிட வேண்டும். ஆனால், எந்த கல்லுாரியும் இதை கடைபிடிப்பதில்லை. நன்கொடை, சிபாரிசு ஆகியவற்றின் மூலம், 'சீட்'களை நிரப்பவே, காலி இடங்களின் உண்மை நிலை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...