சென்னையில் பட்டப் பகலில் ஆர்.டி.ஐ. ஆர்வலர் வெட்டிக் கொலை....!!

சென்னை சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலைப் பகுதியில் வசித்தவர் ஜா.பாரஸ்மால் (59). இவர் சௌகார்பேட்டை நாராயண முதலித் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். பாரஸ்மால், வட சென்னைப் பகுதியில் விதிமுறை கட்டடங்கள் குறித்த தகவல்களை கேட்டு தகவல்
அறியும் சட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு விண்ணப்பங்களை அளித்து வந்தார். மேலும், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வந்தார்.
பாரஸ்மால் அளித்த மனு தொடர்பாக மாநகராட்சியும் பல்வேறு கட்டடங்களுக்கு சீல் வைத்துள்ளது.
இதன் காரணமாக பாரஸ்மாலுக்கு சிலரிடம் பகையும் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் பாரஸ்மால், தனது மோட்டார் சைக்கிளில் சூளை ரொட்டி கிடங்கு சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த ஒரு கும்பல், பாரஸ்மாலை மறித்து தகராறு செய்ததாம். தகராறு முற்றவே அந்தக் கும்பல், பாரஸ்மாலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில் பலத்த காயமடைந்த பாரஸ்மாலை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், பாரஸ்மால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பாரஸ்மால் சடலம் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச் சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் பாரஸ்மாலை கொலை செய்யப்படும் காட்சியும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வரும் காட்சியும் பதிவாகியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அந்தக் காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச் சம்பவத்தில் பாரஸ்மாலை கொலை செய்தவர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாரிடம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் வழக்குரைஞர் கூலிப்படையினரால் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று தகவல் உரிமை ஆர்வலரும் பட்டப் பகலில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...