அரசுக் கலைக் கல்லூரியுடன் போட்டியிடும் தனியார் கல்லூரிகள் !!

கரூரில் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிக்கு வெளியே தனியார் கல்லூரிகள் முற்றுகையிட்டு மாணவர்களை ஈர்த்து வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை ஆகிய இடங்களில் இரு அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன.
குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.
முதலாமாண்டு பட்டப்படிப்பில் காலியாக உள்ள 17 இளங்கலை படிப்புகளில் 1,260 இடங்களுக்கு 2,759 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.


கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்களை கவரும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் தங்களது கல்லூரி பேராசிரியர், பேராசிரியைகள் மற்றும் பணியாளர்களுடன் கரூர் அரசு கலைக்கல்லூரி முன் குவிந்தனர்.
அவர்கள் அங்கேயே சாலையோரம் சிறிய அரங்குகள் அமைத்து, கலந்தாய்வுக்கு வந்த மாணவ,மாணவிகளிடம் தங்களது கல்லூரியில் இன்னென்ன படிப்புகள் உள்ளன, விடுதி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன என்பதை தெளிவாக விளக்கிக் கூறினர்.
சில தனியார் கல்லூரிகள் பேருந்துகளை சாலையோரம் வரிசையாக நிறுத்தி அதன் மேல் பேனர் வைத்து, அதில் தங்களது கல்லூரியில் குறைந்த அளவே கல்விக் கட்டணம் வசூலிக்கிறோம் என போட்டிபோட்டு கட்டணத்தின் பட்டியலையும் தொங்கவிட்டிருந்தனர். இந்த போட்டியில் கரூர் மாவட்ட தனியார் கல்லூரிகள் மட்டுமின்றி திண்டுக்கல், நாமக்கல் போன்ற அயல்மாவட்ட கல்லூரிகளும் களத்தில் குதித்திருந்தன.
இதுதொடர்பாக கரூர் அரசு கலைக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள சிறந்த அரசு கலைக்கல்லூரிகளில் ஒன்றாக கரூர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. கடந்த 2014-ல் நாக் கமிட்டி(தரமதிப்பீட்டுக்குழு) ஆய்வு செய்து கல்லூரிக்கு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியது. இங்குள்ள தேசிய மாணவர் படை வீரர்கள் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இதனால் கல்லூரியின் தரத்தினால் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் மாணவர்கள் இக்கல்லூரியில் சேர ஆசைப்படுகிறார்கள். அரசு கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களை எப்படியாவது தங்களது கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் கல்லூரிகள் இங்கு முற்றுகையிட்டுள்ளன என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...