ஆந்திரா வங்கியில் வேலை இருக்கு...!

ஆந்திரா வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 13-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
வங்கியில் 11 செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும்.
இந்த விண்ணப்பங்களை ரூ.600 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும்.
இந்த வேலைக்கு 21 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் ஆன்-லைனில் அனுப்பவேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து Andhra Bank Recruitment Section, H R Department, Dr. Pattabhi Bhavan, Saifabad, Hyderabad, Telangana -500 004 என்ற முகவரிக்கு அனுபப்வேண்டும்.
விண்ணப்பங்களை ஜூன் 13-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.andhrabank.in/English/home.aspx என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...