தென் மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று அதிகளவில் தண்ணீர் கொட்டியது. பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் பெருமளவில் தண்ணீர் விழுந்ததால் முதல் நாளே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 'சீசன்' நிலவும். கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை பொய்த்ததைத் தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி வர்த்தகர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்த ஆண்டு கடந்த சில நாள்களாக குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

குளிர்ந்த காற்று வீசியதோடு அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பெய்தது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு முதல் மிதமான சாரல்மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் இன்று தண்ணீர்விழத் தொடங்கியது.
எனினும், மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், அருவிகளில் விழும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.
பேருவியில் தண்ணீர் செம்மண் நிறத்துடன் காணப்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனையடுத்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை போலீஸார் வெளியேற்றினர்.
இதேபோல் ஐந்தருவியிலும் ஐந்து கிளைகளிலும் செம்மண் நிறத்துடன் கிளைகள் தெரியாத அளவில் தண்ணீர் கொட்டியது.இதனையடுத்து ஐந்தருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் புலியருவியிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
சீசன் தொடங்கிய நாளிலேயே அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் வர்த்தகர்களும் மிகுந்த மகிழ்ச்சியைடந்துள்ளனர்.
அருவிகளில் தண்ணீர்விழத்தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.