பிகார் மாநிலத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்வாலி காவல்நிலையத்தில் கல்வித் துறை அதிகாரி ராஜீவ் ரஞ்சன் பிரசாத் சிங் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியலில் முதலிடம் பிடித்த சௌரப், ஷ்ரேஷ்தா, ராகுல் குமார், கலையில் முதலிடம் பிடித்த ரூபி ராய் மற்றும் வி.ஆர். கல்லூரியின் இயக்குநர் ஆகியோர் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 420, 465, 467, 468, 471 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரில் பிளஸ் 2 மதிப்பெண்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை காவல்துறையே நேரடியாக விசாரிக்க அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் நேற்று உத்தரவிட்டார்.
பிகாரில் அண்மையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி அண்மையில் நேர்காணல் நடத்தியது.
இதில், தாங்கள் சிறப்பிடம் பெற்ற பாடங்களில் இருக்கும் அடிப்படையான கேள்விகளுக்கு கூட அந்த மாணவர்களால் விடையளிக்க முடியாத காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து, பிகாரில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மதிப்பீடு செய்ததில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க பிகார் பள்ளிக்கல்வி வாரியத்தின் சார்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை...: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மேற்கண்ட குழுவை கலைத்துவிட்டு நேரடியாக போலீஸ் விசாரணைக்கு முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டார்.