உரிமமில்லா காப்பகங்களுக்கு 'செக் !

ஆதரவற்ற குழந்தைகளை பயன்படுத்தி, கஜானாவை நிரப்பி வரும் சில உரிமமில்லா காப்பகங்களுக்கு, மூடுவிழா நடத்தும் நாள் நெருங்கி விட்டது. காப்பகங்களில் மத்திய அரசு சார்பில், நடத்தப்பட்டு வந்த ஆய்வுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், போதுமான


வசதிகள் இல்லாத காப்பகங்கள் மூடப்படவுள்ளன.



தமிழகம் முழுவதும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் காப்பகங்கள் உள்ளன. இக்காப்பகங்களுக்கு, சமூக பாதுகாப்பு துறையில், உரிமம் பெற வேண்டும். கட்டட வசதி, குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்த இடவசதி, கழிவறை, பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு காப்பகம் செயல்பட்டால், உரிமம் வழங்கப்படும்.



இப்பணி மாவட்டந்தோறும் உள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக மேற்பார்வையில் நடக்கிறது. வசதி குறைந்த சில காப்பகங்கள், உரிமம் பெறாமல், சுய லாபத்தை மட்டுமே இலக்கிட்டு இயங்குவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.



பொள்ளாச்சியில் விடுதி சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், இது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. அதன் பின், விழித்துக் கொண்ட அரசு, விடுதிகளுக்கென நெறிமுறைகளை வகுத்தது. ஆனாலும் இன்னும் பெரும்பாலான காப்பகங்களில், விதிகள் பின்பற்றப்படுவதில்லை.



இதனால், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம், காப்பகங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை, குடும்ப சூழல், கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய, 'இந்தியன் சைல்டு கவுன்சில்' என்ற, தன்னார்வ அமைப்புக்கு உத்தரவிட்டது.



இந்த அமைப்பு, குழுவாக சென்று, மாவட்ட வாரியாக உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில், நிறுவனத்தின் பெயர், உரிமம் பெற்ற விபரம், குழந்தைகள், நிதி ஆதாரம், உணவு முறை, பாதுகாப்பு வசதிகள் என, பல்வேறு கோணங்களில், தனித்தனியாக, 30 பக்க அறிக்கையை தயாரித்துள்ளன. இதை ஆய்வு செய்து, தரமற்ற காப்பகங்களுக்கு 'சீல்' வைக்க, முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.



மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 76 காப்பகங்களில், 47 காப்பகங்கள் மட்டுமே, உரிமம் பெற்றுள்ளன. அனைத்து காப்பகங்களிலும் மூன்று பேர் அடங்கிய குழு, ஆய்வு செய்துள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, உரிமம் பெறாத, வசதிகளற்ற காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...