சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது குறித்த அதிரடியான தகவல்களை புத்தகமாக எழுதிவருகிறார் சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின்
வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன். காவல்துறை, வனத்துறையினர் என 180 பேரை கொலை செய்ததாகவும், 200-க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தி உள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வீரப்பன் வேட்டைக்கு 'ஆபரேஷன் கூகுன்' (பட்டுப்பூச்சி ஆபரேஷன்) என்று பெயர் சூட்டப்பட்டது. வீரப்பன் நடமாடும் காட்டுக்குள் விவசாய தொழிலாளியாகவும், வியாபாரியாகவும் பல வேடங்களில் தங்களது வேட்டையை தொடங்கிய காவல்துறையினரில் ஒருவரான வெள்ளத்துரை வீரப்பன் கும்பலுக்குள் ஊடுருவி, வீரப்பனோடு நெருங்கிப் பழகி அவருடைய நம்பிக்கையைப் பெறுகிறார்.
இதையடுத்து வீரப்பனின் கண்பார்வைக் கோளாறுக்குச் சிகிச்சை பெறும் ஆசையைத் தூண்டிவிடுகிறார். வீரப்பனும் அதற்கு இணங்குகிறார். இதையடுத்து கடந்த 18.10.2004 அன்று வீரப்பன் தனது கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவரை வீரப்பன் கும்பலில் இருந்த போலீஸ்காரர் வெள்ளத்துரை மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து, காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஆம்புலன்ஸ் போல் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு கூட்டி வந்தார். ஆம்புலன்ஸை சரவணன் என்னும் காவலர் ஒருவரே ஓட்டி வருகிறார். ஆம்புலன்சிற்குள் ஒரு ரகசியக் காமிரா பொருத்தப்பட்டிருக்கிறது (துரதிருஷ்டவசமாக அது இயங்கவில்லை). முன்னரே தீர்மானித்தபடி ஆம்புலன்ஸை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு சரவணனும் அவருடனிருந்த வெள்ளத்துரையும் காட்டுக்குள் ஓடிவிடுகிறார்கள். போகும்பொழுது மறக்காமல் வேனின் சாவியை எடுத்துக்கொள்கிறார்கள். வேனுக்குள் இருந்த வீரப்பனையும் அவருடைய கும்பலையும் சரணடையச் சொல்லி அதிரடிப்படை போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
வீரப்பன் அதைப் பொருட்படுத்தாமல் அதிரடிப்படை வீரர்களை நோக்கி நவீன ரகத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்குகிறார். நாற்பது அதிரடிப்படை வீரர்களும் வேறு வழியே இல்லாமல் வேனுக்குள் சிறைப்பட்டிருக்கும் நால்வரையும் நோக்கி நவீன ரகத் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். அதில், சம்பவ இடத்திலேயே வீரப்பன் உயிரிழந்தான். அவருடைய கூட்டாளிகள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
வீரப்பனுக்கு எதிரான இந்த வேட்டையை தலைமை தாங்கி வழிநடத்திய அப்போதைய சிறப்பு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், பின்னர், சி.ஆர்.பி.எப். தலைவராக பணியாற்றி, ஓய்வு பெற்று விட்டார். தற்போது அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது பற்றி அவர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார்.
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், சந்தன மர கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி தெளிவான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன். இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, சிலரது பெயர்களை தவிர்த்துள்ளேன் என்று கூறினார்.