இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று மாலையுடன்
முடிந்தது. இதன்படி, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, ஒன்பது அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பியுள்ளன. ஒரு லட்சத்து, ஆயிரத்து, 318 இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த ஆண்டு...விளையாட்டுப் பிரிவில், 358 இடங்களும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.கடந்த ஆண்டு, 89 ஆயிரம் இடங்களே காலியாக இருந்தன.
இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் அண்டு
கம்யூனிகேஷன்ஸ், கம்யூ., சயின்ஸ் மற்றும் ஐ.டி.,க்கு
கடந்த ஆண்டை போலவேநல்ல வரவேற்பு இருந்தது.ஆனால், மெக்கானிக்கல் பிரிவுக்கு கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்களேமுக்கியத்துவம் அளித்தனர்.
அதேநேரம்,சிவில் பாடப்
பிரிவுக்கு, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை யின் கட்டுப்பாட்டிலுள்ள, 13 கல்லுாரிகளில், 1,054 இடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லுாரிகளில், நான்கு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 260 இடங்கள் நிரம்பவில்லை.
இந்த திடீர் மாற்றம் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:மொத்தமுள்ள, 525க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 100 கல்லுாரிகளுக்கு மட்டுமே மாணவர்கள் அதிக முக்கியத்துவம்கொடுத்துள்ளனர். 212 கல்லுாரிகளில், ஓ.சி., எனப்படும் இதர பிரிவினருக்கான இடங்கள் காலியாக
உள்ளன. தமிழகத்திற்கு, 300 கல்லுாரிகள் போதும் என்ற நிலையே உள்ளது. எனவே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,
மற்றும் அண்ணா பல்கலையின் அதிகாரிகள், கல்லுாரிகளை வரைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் பாடத்திட்டத்தை வேலைவாய்ப்புக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ்...
எப்போதும் போல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த இ.சி.இ., மற்றும் ஐ.டி., படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரியல் எஸ்டேட் வணிகத்தின் இறக்கம், மாறி வரும் தொழில்நுட்பம் போன்றவற்றால், சிவில் படிப்புக்கான எண்ணிக்கை, 50
சதவீதம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.