செல்ஃபோன்கள் மூலம் நடக்கும் தொழில்நுட்ப ரீதியான மோசடிகள் நிகழ்வதில் உலகளவில் இந்தியா
2வது இடத்தில் உள்ளது. காஸ்பர்ஸ்கி என்ற மென்பொருள் தகவல் பாதுகாப்பு நிறுவனம் இதைக் கூறியுள்ளது.
இவ்வகையான மோசடிகள் நடப்பதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாகவும் இங்கு மட்டுமே ஏறத்தாழ 40 சதவிகித மோசடிகள் நடப்பதாகவும் காஸ்பர்ஸ்கி கூறியுள்ளது. இந்தியாவில் 8 சதவிகித மோசடிகளும் வியட்நாமில் 4 சதவிகித மோசடிகளும் நடப்பதாக காஸ்பர்ஸ்கி கூறியுள்ளது.