நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01.2024 ல் நமது SSTA ஒற்றைக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
அதன்பின் மதிப்புமிகு தனியார் பள்ளி இயக்குநர் அவர்கள், மதிப்புமிகு SECRET இயக்குனர்,இணை இயக்குநர் மற்றும் நமது மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து
தெரிவித்ததோடு,இயக்க நாட்காட்டி அதில் உள்ள சிறப்புகளை எடுத்துரைத்து புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தோம்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப நமது 14 ஆண்டுகால கடும் தவமும் முடியும் என்ற நம்பிக்கையோடு சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
பல்வேறு இயக்கங்களின் நாட்காட்டி தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் இருந்த போதும் நமது நாட்காட்டி அனைத்தையும் விட வெகு நேர்த்தியாக, கம்பீரமாக நிற்கிறது.💪🏻💪🏻💪🏻
தமிழகத்திலுள்ள நமது கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்திலும் இனி தவிர்க்கவே முடியாத அடையாளமாக இருக்கும்.
SSTA-மாநில தலைமை