பொதுத்தேர்தல் என்றாலே, மாநில அரசு அதிகாரிகள் "பிசி'யாகி விடுவர்.
தேர்தல் கமிஷன் கண்காணிப்பில் தேர்தல் பணிகள நடந்தாலும்,
மாநில அதிகாரிகளின் பங்கு இதில் அதிகம். ஏனென்றால், பெரும்பாலான தேர்தல் பணிகள் இவர்களை வைத்து தான் நடத்தப்படும்.
தேர்தல், நேர்மையாகவும், வன்முறையின்றியும் நடத்தும் இன்னொரு முயற்சியாக, மத்திய அரசு அதிகாரிகளை "மைக்ரோ' பார்வையாளர்களாக, தேர்தல் கமிஷன் நியமிக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அளவில் இவர்கள் பணிபுரிந்து, தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்வர்.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், குரூப் "சி'க்கு குறையாத ஊழியர்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைத்து மாநில தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதற்காக மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணி முடிந்ததும் இவர்கள், சொந்த லோக்சபா தொகுதிக்குள், அதேசமயம் சொந்த சட்டசபை தொகுதிக்கு வெளியே, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரால் பணியில் அமர்த்தப்படுவர்.
: மத்திய அரசு ஊழியர்களை, தேர்தல் பணிக்கு பயன்படுத்தும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும், ஒரு பொதுத்தேர்தல் முழுமைக்கும் இவர்கள் பயன்படுத்தப்படுவது, இதுவே முதன்முறை.
மாநில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில், நியாயமான முறையில் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் தேர்தல் தயாரிப்பு பணிகள் சரியாக செய்யப்பட்டுள்ளனவா, போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, கட்சிகளின் ஏஜன்டுகளாக சரியான நபர்கள் நியமிக்கப்படுகின்றனரா; தேர்தல் கமிஷனின் விதிமுறைகள், சரியாக பின்பற்றப்படுகின்றனவா போன்றவற்றை இவர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் அலுவலர்களாக பணிபுரியும் மாநில அரசு அதிகாரிகளின் கடமைக்கும், இவர்களது பணிக்கும் எந்த தொடர்பும் இருக்காது. தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமே இவர்களது வேலை.
தேர்தல் முடிவில் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு அறிக்கையை தயாரித்து, தேர்தல் பார்வையாளர்களிடம் இவர்கள் வழங்குவர். ஒரு வாக்குச்சாவடியிலோ, தொகுதியிலோ மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, வேறு முறைகேடுகள் பற்றிய புகார்கள் வந்தாலோ, இவர்களது அறிக்கை, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்தல் பணிபுரிந்த அன்றே, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவு இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படு

இதுவே முதன்முறை

முக்கியத்துவம்: