நேரங்கெட்ட நேரத்தில் மின் தடை: மின் வாரிய அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

அறிவித்தபடி மின் தடை செய்யாதது; இரவு நேரத்தில் மின் தடை என, நேரம் கெட்ட நேரத்தில், மின் தடை செய்வதால், மின் வாரிய அதிகாரிகள் மீது, பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், மின் பற்றாக்குறை நிலவுவதால், சுழற்சி முறையில், சென்னையில், காலை, 8:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை அறிவிக்கப்பட்டும்; மற்ற பகுதிகளில், நான்கு ஐந்து மணி நேரம், அறிவிக்கப்படாமலும், மின் தடை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மேட்டூர், வடசென்னை விரிவாக்க, புதிய அனல் மின் நிலையங்களில், கூடுதல் மின்சாரம் கிடைத்ததால், மின் தடை அமலில் இருந்தும், சென்னையில் மின் தடை செய்யவில்லை. மற்ற பகுதிகளில், மின் தடை நேரம் குறைக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில், புதிய மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், இரண்டு மணி நேரம் மின் தடை, மீண்டும் அமல்படுத்தப்பட்டது. சென்னையில், மின் தடை செய்யும் இடங்கள், மின் தடை நேரம் ஆகியவை, மின் வாரிய அதிகாரிகளின் சார்பில், மாதந்தோறும், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்கள்; 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்; 'ஏசி' பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால், கடந்த, இரண்டு வாரங்களாக, மின் தேவை, வழக்கத்தை விட, 500-1,000 மெகாவாட் அதிகரித்துள்ளது.

அதேசமயம், மின் உற்பத்தி, சராசரியாக, நாள்தோறும், 11 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளதால், மின் பற்றாக்குறையும், தொடர்ந்து, 1,400-1,500 மெகாவாட் என்றளவில் உள்ளது.இதனால், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம், மின் தடை செய்வதுடன், இரவு நேரங்களில் கூட, பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதனால், மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்வதும், ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இரவு நேரங்களில், ஓவர் லோடு' காரணமாக, மின் வினியோக பெட்டியில், பழுது ஏற்படுவதால் தான், மின் தடை செய்யப்படுகிறது. பழுது சரி செய்யப்பட்ட பின், சில மணி நேரங்களில், மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...