அரசு சேவை இல்ல பள்ளியில் சேர விண்ணப்பம் வினியோகம்

"சிவகங்கையில் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக" கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இங்கு 9 முதல் பிளஸ் 2 வரை உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டிற்கு 9 முதல் பிளஸ் 2 வரை படிப்பில் இடைநின்று, பின் படிப்பை தொடர விரும்பும் தகுதி உடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற திருமணம் ஆகாத ஏழைகள் விண்ணப்பிக்கலாம். குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.24,000க்குள் இருத்தல் வேண்டும். வயது 14 முதல் 35க்குள். வயது 5க்கு கீழ் உள்ள குழந்தையின் தாயும் படிக்க விரும்பினால், குழந்தை இலவசமாக பராமரிக்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வருமான சான்று அவசியம். இதில், சேரும் மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்கும் இடம், மருத்துவம், சீருடை, பாடப்புத்தகங்கள் இலவசம்.
இங்கு, படித்து பிளஸ் 2 விற்கு பின் பட்டம், பட்டய படிப்பிற்காக ரூ.30 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களை, கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலை பள்ளி, பையூர் பிள்ளை வயல், வள்ளிசந்திரா டவுன்சிப், சிவகங்கை. போன்: 04575 - 291 020ல் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...