நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத மெட்ரிக் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்த, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்ககம்
சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, மெட்ரிக் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீத இடங்களில் நலிவடைந்த பிரிவு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தனியார் மெட்ரிக் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பள்ளிகளில் இடமிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு பள்ளிகளில் வாய்ப்புகள் இருந்தும் இடம் ஒதுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையொட்டி, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்காத தனியார் சுயநிதி பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தாததற்கான காரணம் குறித்த விளக்கத்தை பள்ளிகளில் பெற்று அறிக்கை அனுப்ப வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்ககம், அனைத்து மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், நவம்பர் மாதம் இறுதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் மெட்ரிக் பள்ளி இயக்ககம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது