ஆதி திராவிடர் மாணவர்களுக்கு 87.30 லட்சம் கல்விக் கடன்

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு, கல்விக் கடனாக 87.30 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி ஆதிதிராவிடர்களுக்கு மேம்பாட்டு கழகத்தின்
மூலம் 2014-15 ஆண்டிற்கான கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. பல்வேறு கல்லுாரிகளில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்பு பயிலும் 151 ஆதிதிராவிட மாணவர்களுக்கு 87.30 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் பிரசாந்த்குமார், மேலாண் இயக்குனர் இளங்கோவன் உடனிருந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...