ஓய்வுபெற்ற மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் தாக்கப்பட்டதில் துணைவேந்தருக்கு எதிராக பதிவான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரியதற்கு குற்றம் சாட்டப்பட்ட இதர ஆறு பேரையும்
எதிர்மனுதாரர்களாக இணைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கவர்னரிடம் புகார்
மதுரை சீனிவாசன் தாக்கல் செய்த மனு: நான் மதுரை காமராஜ் பல்கலை ஓய்வு பெற்ற பேராசிரியர். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்களுடன் இணைந்து பல்கலை பாதுகாப்பு அமைப்பு நடத்தி வரும் நாங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிட நியமனங்களில் முறைகேடுகளை எதிர்த்து போராடினோம்; கவர்னரிடம் புகார் செய்தோம்.
மே 16 காலை 6:30 மணிக்கு நடைபயிற்சியின் போது என்னை கடுமையாக தாக்கிய இருவர் துணைவேந்தருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினர். துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், பதிவாளர் முத்துமாணிக்கம் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களில் இருவரை கைது செய்தனர்; மற்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி உள்துறை செயலர், டி.ஜி.பி.யிடம் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
ஒத்தி வைப்பு
நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன் மனு விசாரணைக்கு வந்தது. "இவ்வழக்கில் எதிர்மனுதாரராக துணைவேந்தர் இணைக்கப்பட்டு உள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறு பேரையும் எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும். ஜூலை 21ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்