வேட்டி கட்ட தடை; கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை தகர்க்க வேண்டும்: சகாயம்

வேட்டி கட்ட தடை என்ற தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை தகர்க்க வேண்டும் என்று கோ–ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம்
தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்புக்குள் நடந்த பொது நிகழ்ச்சிக்கு சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் காந்தி, ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் வேட்டி அணிந்து சென்றதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

ஆங்கிலேய தேசத்தில் நமது பாரம்பரிய உடையை அணிந்து வலம் வந்த காந்தியையும், விவேகானந்தரையும் அந்த தேசம் அண்ணாந்து பார்த்தது. ரஷ்யநாட்டில் நடுங்கும் குளிரிலும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி–சட்டையில் வலம்வந்த காமராஜரை பார்த்து அந்த தேசமே வியந்தது. அப்படிப்பட்ட தமிழரின் பாரம்பரிய உடைக்கு அந்நிய நாட்டில் கிடைக்கும் மரியாதை நம் நாட்டில் கிடைக்காதது பெரும் வெட்கக் கேடானது.

தமிழ் காற்றை சுவாசித்து, தமிழ் மண்ணில் இயங்கும் கிளப்புகள் தமிழ் கலாச்சாரத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கொந்தளிக்கின்றன. தமிழுக்கும், தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உடைகளுக்கும் மரியாதை அளிக்காத கிளப்புகளை தடை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி, அந்த கிரிக்கெட் கிளப்பின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, பாரம்பரிய உடையை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினர்.

கோ–ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினத்தை அறிமுகப்படுத்தி வேட்டியின் பெருமையை நிலைநாட்டிய அதன் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் வாரம் ஒருநாளாவது தவறாமல் வேட்டி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் இதுபற்றி கூறும்போது, ''வேட்டி தமிழர்களின் ஆடை மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமை மிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம்பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சுதந்திர தேசத்தில் வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற விதியை பின்பற்றும் அடிமையாக இன்றும் பலர் இருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழர் கலாச்சாரம் தாழ்வானது என்ற எண்ணத்தை தக்க வைக்கவும், மேற்கத்திய கலாச்சாரம்தான் உயர்வானது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில் உளவியல் ரீதியாக நடத்தப்படும் வன்முறை.

தமிழக அரசே வேட்டி தினத்தை கொண்டாடி வரும் காலக்கட்டத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்புடையதல்ல. இந்த விதிகள் மாற்றப்பட வேண்டும். வேட்டி தினம் என்பது ஆண்டில் ஒருநாள்தான். ஆனால் இதை ஒரு இயக்கமாக உருவாக்குவதுதான் ஆங்கில மரபின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடாத அடிமைகளுக்கு அளிக்கும் பதிலாக அமையும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...