தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்பாட்டம்

பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்டு, பெற்றோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட எக்லாஸ்புரத்தில், அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 23 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக செட்டியப்பனூரைச் சேர்ந்த கருணாகரன், 44 தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளி
மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக புகார்கள் வந்தது. இதுகுறித்து பெற்றோர், அங்குள்ள பஞ்சாயத்து தலைவர் தேவசோழன், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாவதியிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் கருணாகரணை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவின்போது, பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் செல்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...