புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளிலும், 25 சதவீத ஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவர்களுக்கு பெற வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: கல்யாணசுந்தரம், பாலன்: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும், புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், சில பாடப் பிரிவுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைத்து பாடப் பிரிவுகளிலும், 25 சதவீத ஒதுக்கீடு பெற, புதுச்சேரி அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
முதல்வர் ரங்கசாமி: 18 பட்ட மேற்படிப்புகளில் 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் 25 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றவுடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை விரைவில் அளிக்க வலியுறுத்தி, பல்கலைக்கழகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்ளப்படும்.
பாலன், கல்யாணசுந்தரம்: பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு இதுவரை வழங்காததற்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
முதல்வர் ரங்கசாமி: இதுவரை 271 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் 40 நபர்களுக்கு வேலை வழங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்ளப்படும்.
பாலன்: பல்கலைக்கழகத்தில் 149 பிரிவுகளில் 2837 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 25 சதவீத ஒதுக்கீடாக 708 இடங்கள், புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்; சட்டம் கொண்டு வர வேண்டும்.
கல்யாணசுந்தரம்: பல்கலைக்கழகத்திற்கு 850 ஹெக்டேர் இடம் தந்துள்ளோம். ஆனால், புதுச்சேரி மாணவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. 25 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, தலைமைச் செயலர், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினாரா?. நிலம் தந்த விவசாயிகளுக்கு வேலை தர வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. தற்போது, காலியிடங்கள் உள்ளதால், வேலை தர வேண்டும்.
லட்சுமி நாராயணன்: புதுச்சேரி அரசு, மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதி, ஜிப்மரில் வாங்கியுள்ளதைபோல, பல்கலைக் கழகத்திலும் 25 சதவீத இடத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி, புதுச்சேரிக்கு வரும்போது அவரிடம் கோரிக்கை வைக்கலாம்.