‘சுய கற்பனையால் கட்டப்படுவது தான் படைப்பாற்றல்’

முழுவதும் சுய கற்பனையால் கட்டப்படுவது தான் படைப்பாற்றல்,” என, சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினர், பப்பு வேணுகோபால் ராவ் பேசினார்.

சென்னையில், சாய் பிரபஞ்ச் என்ற, கல்லூரி மாணவர் எழுதிய
’கான்ட்ராக்டர்’ என்னும், ஆங்கில நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, பப்பு வேணுகோபால் ராவ் பேசியதாவது:

தயாரிப்புகள், இந்த உலகத்தில் மலிந்து கிடக்கின்றன. ஆனால், படைப்பாற்றலுடன் கூடிய தயாரிப்புகள் தான் அரிதாக இருக்கின்றன. ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கு நடனம் அமைப்பது, ஏற்கனவே மெட்டமைத்த பாடலை கற்று கொண்டு பாடுவது போன்றதல்ல படைப்பாற்றல்.

அது முழுக்க முழுக்க சுய கற்பனையால் கட்டப்படுவது. அப்படி, ஒருவரின் சுய கற்பனையால் கட்டப்படும் ஒரு படைப்பு, ரசிகனை, இன்னொரு உலகத்திற்கு அழைத்து செல்வதாக இருந்தால், அது சிறந்த படைப்பாக கருதப்படும். அந்த வகையில், ’கான்ட்ராக்டர்’ நாவல் சிறந்த படைப்பாக உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...