வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்; மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தட்டை அணுக்கள் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்,'' என, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
டெங்கு பாதிப்புக்குள்ளாகி, திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து, மாவட்ட
கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், 2 நாட்கள் முகாமிட்டு, சுகாதார பணிகளை துரிதப்படுத்தினார். நேற்று, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு
மேற்கொண்டார்.அவசர கிசிச்சை பிரிவுக்குச் சென்று, சிகிச்சை பெறுவோர் விவரங்களை கேட்டறிந்தார். டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர் பற்றாக்குறை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு பணியாளர் நிரந்தரமாகவும், இரண்டு பங்கு பணியாளர்கள் தற்காலிகமாகவும் நியமிக்கப்படுவர்.
டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோரின் தட்டை அணுக்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை, தட்டை அணுக்கள் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு குறைந்தாலும், மேலும் 2 நாட்கள் ஓய்வு எடுக்கச் செய்துவிட்டு, அதன்பின்னரே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
பச்சிளம் குழந்தை வார்டுக்கு சென்ற அவர், ""வார்டுக்குள், ஒருவரை மட்டும் அனுமதிக்க வேண்டும்; அதுவும், "மாஸ்க்' அணிந்திருக்க வேண்டும்,'' என்றார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும், கொசு வலை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது, கோல்டன் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் இறந்த சுப்புலட்சுமியின் தந்தை மனோகரன் உள்ளிட்டோர் அவரை சூழ்ந்தனர். "சுப்புலட்சுமி பாட்டி தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள் ளார். சிகிச்சை பெற வந்தார். கூட்டமாக இருக்கிறது என கூறி மாத்திரை கொடுத்து அனுப்பு கின்றனர். ஒரு வாரமாக சிகிச்சை பெற முடியவில்லை. குழந்தைகளை கையால் தொட்டு பார்த்துக்கூட சிகிச்சை அளிப்பதில்லை,' என, குற்றம் சாட்டினர்.
கண்காணிப்பாளரை அழைத்த செயலர், ""இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகாத வகையில், ஒவ்வொரு நோயாளி மீதும் தனி கவனம் செலுத்தி, பரிசோதனை, சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே இருந்த நோய் கண்டறியும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ பிரிவுகளை மேம்படுத்த வேண்டுமென கேட்கப்பட் டது. மண்டல நோய் கண்டறியும் மையத்தை மீண்டும் துவக்க முயற்சிக்கப்படும் என உறுதியளித்தார்.சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்த செயலர், ""நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதைபோல், நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். "கேஸ் மேனேஜ்மென்ட்' பணியை காட்டிலும், "காஸ் மேனேஜ்மென்ட்'(வருமுன் காப்பது) பணி மிகவும் முக்கியம்,'' என்றார்.
இறுதியாக, நர்சிங் மாணவியரிடம் குறைகேட்ட அவர், ரத்த வங்கியை பார்வையிட்டு, தேவையான வசதி குறித்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தினார். கூடுதலாக "லேப் டெக்னீசியன்' நியமிக்க வேண்டுமென டாக்டர் பிரியா முறையிட்டார்.மாநகராட்சி கமிஷனர் அசோகன், சப்-கலெக்டர் செந்தில்ராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் தனபால், துணை இயக்குனர் ரகுபதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
"தினமலர்' நாளிதழில்...
சுகாதாரத்துறை செயலர், தலைமை மருத்துவமனைக்கு காலை 8:30க்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. நிருபர்களும், அதிகாரிகளும் காத்திருந்தனர். ஆனால், டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, சுகாதார பணிகளை பார்வையிட்ட பிறகு, காலை 11:45க்கு அரசு மருத்துவமனை வந்தார்.அவரிடம், இதுவரை தமிழகத்தில் எத்தனை பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்? எவ்வளவு பேர் பலியாகியுள்ளனர்? என கேள்வி எழுப்பப்பட்டது. ""டெங்கு காய்ச்சல் பலி குறித்து தெரிவித்தால், மக்களிடையே பதற்றம் அதிகரிக்கும். டெங்குவும், வைரஸ் காய்ச்சல் போன்றதே. முறையான சிகிச்சை பெற்றால் குணமடையலாம்,'' என்றார்.டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க, கிணறுகளில், "கம்பூசியா' மீன்களை விட வேண்டுமென அறிவுறுத்தினார். மாநகராட்சி கமிஷனர் அசோகன், "தினமலர்' திருப்பூர் சப்ளிமென்ட் பிரதியில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார். ஆர்வமாக வாங்கிப் படித்த செயலர், நாளிதழை, பைல்களுடன் சேர்த்து எடுத்துச்சென்றார்.