தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

விழுப்புரம், பெருமுக்கல் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவிகளின் புகாரின்பேரில், சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஜான்பீட்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப் பள்ளியை, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். கடந்த டிச., 10ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி
சீத்தாராமன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது பள்ளி பூட்டப் பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் பாரி, தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு விடுமுறை அளித்து, ஆசிரியர்களையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துகல்வி அதிகாரி சீத்தாராமன் நேற்று உத்தரவிட்டார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...