வளி மண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் அதிகப்படியான வெயில் பதிவாகி வருகிறது. அதே நேரம் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

லட்சத்தீவுகளுக்கு அருகில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 3-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ புதன்கிழமை பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்.

முத்துப்பேட்டையில் 100 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் 30 மி.மீ., நாகர்கோவிலில் 20 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...