ஜிப்மர் ஆன்லைன் நுழைவுத்தேர்வை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தல்

ஜிப்மர் ஆன்லைன் நுழைவுத்தேர்வை வெளிப்படையாக நடத்துவதோடு, விடைத்தாளை டவுன்லோடு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


ஜிப்மர் நுழைவுத் தேர்வு, ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த மாணவர்கள் பலர், தங்களுடைய விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தபோது, பல தவறுகளுடன் பதிவிறக்கமானது.

குறிப்பாக, பிறந்த தேதியில் 3 என்று டைப் செய்தவர்களுக்கு, 5 என்றும், 7 என்று குறிப்பிட்டவர்களுக்கு 9 என்றும் மாறி வந்தது. இதனால், பலமுறை விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். தேர்வு மைய இடங்களும் மாறிவிட்டது.

இந்நிலையில், ஜிப்மர் ஆன்லைன் நுழைவுத் தேர்வினை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் நலச்சங்கம், மருத்துவ படிப்பு பயில விழையும் மாணவர் - பெற்றோர் நல கூட்டமைப்பு என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பாக்கமுடையான்பட்டு, பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது. ஜிப்மருக்கு நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஜிப்மர் ஆன்லைன் நுழைவு தேர்வினை வெளிப்படையாக நடத்த வேண்டும், ஆன்லைன் நுழைவுத் தேர்வு முடிந்தவுடன், விடைத்தாளை டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்த வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பலருக்கு ஆன்லைன் நுழைவுத் தேர்வினை எழுதவற்கான அறிமுகம் கிடையாது, எனவே, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வினை போன்று ஆன்லைன் அல்லது நேரடியாக எழுத வாய்ப்பளிக்க வேண்டும்.

கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் நுழைவுத்தேர்வு முடிந்த மாலையில் விடைத்தாள் வெளியிடப்படுகிறது. அதைபோன்று ஜிப்மரில் நுழைவுத் தேர்வு விடைத்தாளினை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...