தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் 6.15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைப்பதன் அடையாளமாக 5 பேருக்கு மிதிவண்டிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அவர் வழங்கினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் கடந்த 2001-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நிகழ் கல்வியாண்டில் ரூ. 233.17 கோடி செலவில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 2 லட்சத்து 73 ஆயிரத்து 592 மாணவர்கள், 3 லட்சத்து 41 ஆயிரத்து 926 மாணவிகள் என மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 518 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைப்பதன் அடையாளமாக 5 பேருக்கு மிதிவண்டிகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்