புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள்

புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள்புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருத்தினை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஆட்கொல்லி நோயான புற்றுநோய் தாக்கி உலகில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நோய் தாக்கிய ஆரம்ப காலகட்டங்களிலே சிகிச்சை அளித்தால் மட்டுமே புற்றுநோயை குணப்படுத்த முடியும். இந்த நிலையில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய புதிய மருத்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெக்ஸ்னர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் தாஸ்குப்தா, ஓகியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பாசு ஆகிய இரு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர். இருவரும் மேற்கொண்ட 14 வருட ஆராய்ச்சியில், "தோமைன்" என்ற மகிழ்ச்சிபடுத்தும் ஹார்மேன் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக இந்த மருந்து எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. மனிதர்கள் மீதும் இச்சோதனை வெற்றி பெற்றால் மிகக் குறைந்த விலையில் புற்றுநோய்க்கான மருந்து கிடைக்கும் என்று தாஸ்குப்தா மற்றும் பாசு தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...