தேர்வுக்காக பணம் செலுத்த வேண்டி இருப்பதால், உடனடியாக, கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவியர் தெரிவித்தனர்.
ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், தற்போது, தேர்வுக்காக மாணவர்கள்
தயாராகி வருகின்றனர். கல்லுாரியில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென,17 மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை பிற்படுத்தப்பட்டோர் துறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கல்லுாரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு விலங்கியல் மாணவியர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
தற்போது, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், அங்குள்ள பெட்டியில் மனுவை இட்டுச்சென்றனர். இதனை பார்த்த அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரிகளிடம் சென்று, இந்த புகார் குறித்து தெரிவிக்க கூறியுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், மாணவியர் பிரச்னை குறித்து பரிசீலிக்கப்படும் என்றனர்.