'இ-ஆதார்' மூலமும் மொபைல் இணைப்பு

ஆதார் அட்டைக்கான ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையிலும், மொபைல் போன் இணைப்புகளை பெறலாம்' என, தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுகிறது. முகவரி, அடையாளச் சான்றாகவும் இது பயன்படுகிறது. இந்நிலையில், ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலமாக ஒப்புதல் கடிதம் அனுப்பப்படுகிறது. அதன்பிறகே, ஆதார் அட்டை தபால் மூலம் அனுப்பப்படுகிறது.



பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, இ - ஆதார் எனப்படும், ஆதார் எண்ணுக்கான ஒப்புதல் கடிதம் அல்லது ஆதார் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆவணத்தின் அடிப்படையில், மொபைல் போன் இணைப்புகளை வழங்கலாமென, தொலைத் தொடர்பு துறை அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...