பெட்­ரோ­லுக்கு ஒரே சீரான விலை: அர­சுக்கு ஏ.ஐ.பி.டி.ஏ., கோரிக்கை

பெட்ரோல், டீசலுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான விலை நிர்ணயிக்க வேண்டும் என, பெட்ரோல் நிலைய உரி­மை­யா­ளர்கள் கூட்­ட­மைப்­பான – ஏ..ஐ.பி.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இதன் தலைவர், அஜய் பன்சால் கூறி­ய­தா­வது: பெட்ரோல், டீசல் விலை, மாநி­லத்­திற்கு மாநிலம் வேறு­ப­டு­கி­றது.
இதற்கு, ‘வாட்’ வரி தான் காரணம். ஒரு லிட்டர் பெட்­ரோ­லுக்கு, 60 பைசா முதல், 4 ரூபாய் வரையும், டீச­லுக்கு, 1 ரூபாய் முதல், 7.50 ரூபாய் வரையும் வித்­தி­யாசம் உள்­ளது. இந்­தி­யா­வி­லேயே, தமி­ழ­கத்தில் தான், மிக அதி­க­மாக, 35 சத­வீத வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. கோவாவில், வரி குறை­வாக உள்­ளது.
டீச­லுக்கு ராஜஸ்தான், மேற்கு வங்க மாநி­லங்கள், 20 – 24 சத­வீத வரி விதிக்­கின்­றன. இது, அரி­யா­னாவில் குறை­வாக உள்­ளது. இதனால், மாநில எல்­லை­யோர பெட்ரோல் நிலை­யங்கள் மூடப்­ப­டு­கின்­றன. இதை தவிர்க்க, நாடு முழு­வதும், பெட்ரோல், டீச­லுக்கு ஒரே சீரான விலை தேவை. ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்றும் சேவை வரியில், இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனால் அதில், பெட்ரோல் மற்றும் டீசலை சேர்க்க, மாநில அர­சுகள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றன.
தமிழ்­நாடு பெட்­ரோ­லிய டீலர் கூட்­ட­மைப்பின் தலைவர் முரளி: தமி­ழ­கத்­துடன் ஒப்­பிடும் போது, புதுச்­சே­ரியில், 1 லிட்டர் பெட்ரோல் விலை, ஐந்து ரூபாய்; டீசல் விலை, இரண்டு ரூபாய் குறை­வாக உள்­ளது. வெளியூர் செல்லும் வாகன ஓட்­டிகள், விலை குறை­வாக உள்ள மாநி­லங்­களில், பெட்ரோல், டீசல் போடுவர். இதனால், விலை அதிகம் உள்ள மாநி­லங்­களில், பெட்ரோல், டீசல் விற்­பனை பாதிக்கும்; அர­சுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்­படும். நாடு முழு­வதும், ஒரே சீரான விலை இருந்தால், இந்த பாதிப்பு இருக்­காது
தமிழ்­நாடு குறு, சிறு தொழில்கள் சங்க முன்னாள் தலைவர் தங்­கராஜ்: வட மாநி­லங்­களில், பெட்­ரோ­லியப் பொருட்கள் விலை குறை­வாக உள்­ளதால், அவற்றை பயன்­ப­டுத்தும், பிளாஸ்டிக், ரசா­யன தொழிற்­சா­லை­களின் தயா­ரிப்­புகள், குறைந்த விலையில் கிடைக்­கின்­றன. ஆனால், தமி­ழ­கத்தில், பெட்­ரோ­லியப் பொருட்கள் விலை அதி­க­மாக உள்­ளதால், அவற்றின் மூலம் தயா­ரிக்­கப்­படும் பொருட்கள் விலை அதி­க­மாக உள்­ளது. பெட்ரோல், டீசல் விலை சீர­மைக்­கப்­பட்டால், இந்த பிரச்னை எழாது.
கவுரி ராமச்­சந்­திரன், பொரு­ளா­தார நிபுணர்: மாநில அர­சுகள், மதிப்பு கூட்டு வரி விதிப்­பதால், ஒவ்­வொரு மாநி­லத்­திலும், பெட்ரோல், டீசல் விலை மாறு­ப­டு­கி­றது. எனவே, அவற்றின் விலை, நாடு முழு­வதும் ஒரே மாதிரி இருந்தால், அனை­வரும் பயன் பெறுவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...