தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இங்கிருக்கும் மடாதிபதிகளையும், ஆதீனகர்த்தர்களையும் இணைத்து திட்டமிட, அரசு தரப்பில் ஆலோசனைககள் நடந்து வருகின்றன.
இது குறித்து, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:காவிரி, முல்லைப் பெரியாறு
, பாலாறு என, தமிழகத்தின் எல்லையில் இருக்கும் கர்நாடகா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள், தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நீரை, முறையாக கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகள் எத்தனை இருந்தாலும், அதை கொஞ்சமும் மதிப்பதில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்படவில்லை.
கஞ்சி தொட்டி:காவிரியில், இந்தாண்டு, முழுமையாக தண்ணீர் தராததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை -மற்றும் சம்பா சாகுபடிகள் பாதித்துள்ளன. விவசாயிகளின் வறுமையை போக்க, கஞ்சித் தொட்டிகள் திறக்கப்படுகின்றன.முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் விஷயத்தில், தமிழகத்துடன், கேரளா மல்லுகட்டி வருகிறது. பாசனப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், கேரளாவும் நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் தீவிரமாகி இருக்கிறது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டியதில், வேலுார் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்கள் தண்ணீருக்காக தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.இதற்காக, தமிழகத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பதன் மூலம், தண்ணீர் தேவையில், பெரும் பகுதியை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்க, பல ஆண்டுகளாக பேச்சு நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சி காலத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தை கருணாநிதி துவங்கினார். தற்போது, இத்திட்டம் பாதி முடிவுற்றுள்ளது. அதேபோல, சத்ய சாய்பாபாவை, தன் வீட்டுக்கே வரவழைத்து பேசி, தெலுங்கு கங்கை கால்வாயை சீரமைத்து, சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தார்.
அழைத்து பேசலாம்:இந்நிலையில், கருமேனியாறு, நம்பியாறு, வைப்பாறு, வேம்பாறு, வைகை, காவிரி, பாலாறு, சிறுவாணி உள்ளிட்ட பல ஆறுகளையும் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகும் நிதியை, மாதா அமிர்தானந்த மயி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நாராயணி சித்தர் பீடம், பங்காரு அடிகளார், தயானந்த சரஸ்வதி, மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல ஆதீனங்கள் மற்றும் மடங்களிடம் பெற்று, திட்டத்தை நிறைவேற்றும் யோசனைகள் அரசுக்கு சென்றுள்ளன.
விரைவில், இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சம்பந்தப்பட்ட ஆதீனகர்த்தர்களையும், மடாதிபதிகளையும் அழைத்துப் பேசக் கூடும். இதை செய்தால், தமிழகம், அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காக, கையேந்த வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.- -