*பள்ளி, மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் 'டெங்கு'வை தடுக்க மாநகராட்சி முயற்சி*
சென்னை:'சென்னை மாநகராட்சி பள்ளி, மருத்துவமனை மற்றும் 'அம்மா' உணவகங்களில், பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்' என, வாராந்திர கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடனான வாராந்திர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ஏற்படும் மர்மக் காய்ச்சல், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மாநகராட்சி பள்ளி, மருத்துவமனை மற்றும் 'அம்மா' உணவகங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கஷாயம் ஆகியவற்றை வழங்கவும்; மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகளை, செப்., 5ம் தேதிக்குள் முடிக்கவும்; சாலை அமைக்கும் பணிகளை, 10ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
பேருந்து சாலைகளில், இரவு நேரங்களிலேயே குப்பை அகற்றவும்; போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், குப்பை லாரிகள் வராமல் தடுக்கவும், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட பணிக்கப்பட்டு
உள்ளனர்.
'மாநகராட்சியின் அனைத்து பணிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.