சாதா போன்களின் தேவை அதிகரிப்பு!!!

கடந்த ஆண்டு, இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 29 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் தற்போது, சாதா (Basic) போன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துவந்தாலும், அடுத்த சில வருடங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை 7 முதல் 11 சதவிகிதம் வரை குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த வருடம் சாதா போன்களின் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இவற்றின் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் தொழில் நுட்ப வசதிகள் அதிகளவில் இருந்தாலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மற்றவர்களை தொடர்புகொண்டு பேசுவதற்கு மட்டுமே போன்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே சாதா போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் சாதா போன்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. கிராமப்புறங்களில் சாதா போன்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளதைப்போலவே, நகர்ப்புறங்களிலும் அடுத்த சில ஆண்டுகளில் இவ்வகை போன்களின் பயன்பாடும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஸ்மார்ட்போன்களில் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுவதால் அதிகநேரம் வாய்ஸ் கால்களை உபயோகிப்பவர்களுக்கு ஸ்மார்ட்போன் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் உபயோகிக்க பேசிக் மாடல் போன்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் பேசிக் போன்களின் விற்பனை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...