சென்னை பல்கலையில் ஆட்டம் : இயக்குனர் விளக்கம் அளிக்க உத்தரவு!!!

சென்னை பல்கலையில் மாணவர்கள் ஆட்டம் போட்டது குறித்து, விளக்கம் அளிக்க, வளாக இயக்குனருக்கு, பல்கலை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலையில், ஜன., முதல், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர் கல்வி செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும்,

கார்த்திக், ஐ.ஏ.எஸ்., தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு, பல்கலை நிர்வாகத்தை கவனிக்கிறது.
இந்நிலையில், நவ., 16 பிற்பகலில், வகுப்புகள் நடந்தபோது, மாணவ, மாணவியர் சிலர், புதிய கல்வி கொள்கைக்கு எதிராக துண்டு பிரசுரம் ஏந்தி, பல்கலை வளாகத்தை சுற்றி, மேள தாளத்துடன் ஆடி வந்தனர். அந்த சத்தத்தால், பேராசிரியர்கள் சிறிது நேரம் வகுப்புகளை நிறுத்தி, ஆட்டம் முடியும் வரை காத்திருந்தனர். நிகழ்வின் போது, பல்கலை பதிவாளர் வெளியூர் சென்றிருந்தார். அவர் சென்னை திரும்பியதும், பல்கலை பேராசிரியர்கள், சந்தித்தனர். 'விஞ்ஞானிகள், சர்.சி.வி.ராமன், டாக்டர் அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் படித்த, சென்னை பல்கலையில் நடக்கும், விரும்பத்தகாத சம்பவங்கள் சர்வதேச அரங்கில், பல்கலையின் தரத்தை குறைக்கும்' என, முறையிட்டனர். இதையடுத்து, 'பல்கலை வளாகத்தில் ஆட்டம் போட்டது யார்; அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன; ஆட்டத்தை தடுக்காதது ஏன்' என, விளக்கம் அளிக்க, வளாக இயக்குனர், ரவீந்திரனுக்கு, பதிவாளர் டேவிட் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.பதிவாளர், டேவிட் ஜவஹர் கூறியதாவது: பல்கலை வளாகத்தில் நிகழ்ச்சியோ, கருத்தரங்கமோ நடத்த, பதிவாளர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. மீறும் மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...