ரேஷன் கடையில், ஆதார்
விவரங்களை "ஸ்கேன்' செய்வது மற்றும் கார்டுதாரர்களின் மொபைல் எண்களை பதிவு செய்யும் நடவடிக்கையில்,
திருப்பூர் மாவட்டம், ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழகம் முழுவதும், பொது
வினியோக திட்டம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வழங்கிய
"பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள நபர்களின் ஆதார் விவரங்களும், மொபைல் எண்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், ஏழு லட்சத்து, 50 ஆயிரத்து, 950 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மொத்தம், 23.88 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
பயனடைந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், ஆதார் கார்டு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தாலும், ரேஷன் கடைகளில், ஆதார் விவரங்களை பதிவு செய்வது வேகமாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 83 சதவீத
கார்டுதாரர்கள், தங்களது மொபைல் எண்களை பதிவு செய்துள்ளனர். ஆதார் கார்டு பதிவு செய்வதில் நிலுவை இருப்பதால், மொத்த உறுப்பினர்
களில், 73 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்துள்ளனர். மொத்த கார்டுகளில், 52 சதவீத கார்டு மட்டும், 100 சதவீத அளவுக்கு ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளது.
அதன்படி, மொத்தம் உள்ள கார்டுகளில், 52 சதவீத கார்டுகள் மட்டும், "ஸ்மார்ட் கார்டு' பெற தகுதி பெற்றுள்ளன. தற்போது, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி நடந்து வருவதால், போலியான கார்டுகள் ரத்து செய்யப்படும். தகுதியற்ற பெயர்களும் நீக்கப்
படும். அதற்கு பிறகு,"ஸ்மார்ட்
கார்டு'க்கான பட்டியல் தயாரிக்கப்படும். தமிழக அளவில், பொது வினியோக திட்டத்துக்கான ஆதார் விவரங்கள்
பதிவு நடவடிக்கைகளுக்கு, மதிப்பெண் வழங்கி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில், 21வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், 20ம் தேதி, ஆறாவது இடத்துக்கு முன்னேறியது. ஆதார் விவரங்கள் பதிவு செய்வது மட்டுமல்ல, ரேஷன் கடை
களில், "பாயின்ட் ஆப் சேல்'
கருவியை பயன்படுத்துவதிலும், திருப்பூர் மாவட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், "ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட்டாலும், பொதுவினியோக திட்டம் சீராக செயல்படுத்த இயலும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக, குடிமைப்பொருள் வினியோக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் உள்தாள்?
பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகள், இம்மாதத்துடன் காலாவதியாகும் என்பதால், மீண்டும் உள்தாள் ஒட்டி, புதுப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதற்காக, பல்வேறு மாவட்டங்களில், உள்தாள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு பெற்ற <உள்தாள்கள் போதுமான அளவு இருப்பு இருப்பதால், புதிதாக அச்சிட தேவையில்லை. அரசிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும், ரேஷன் கடைகளுக்கு உள்தாள் வழங்கி, கார்டுகளில் ஒட்டி புதுப்பிக்கும் பணி நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.