திருவனந்தபுரம் கேரளாவில் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜேக்கப்தாமஸ். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் மீது ஊழல் வழக்கு தொடர்வதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜனவரி 9–ந்தேதி (நேற்று) ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுக்கப்போவதாகவும் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் அறிவித்தது.இவர்களில் 50 சதவீத
அதிகாரிகள் தங்களது விடுப்பு கடிதத்தை நேற்று காலை தலைமை செயலகத்தில் கொடுத்தனர். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்து முதல்–மந்திரி பினராயி விஜயன் பேசினார். அப்போது அதிகாரிகளை அவர் கடுமையாக கண்டித்தார். ‘‘ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒட்டுமொத்தாக விடுப்பு எடுப்பதை நியாயப்படுத்த முடியாது. உயர் அதிகாரிகள் ஊழல் விசாரணையை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையில் அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் நீங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள்’’ என்றார்.இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்–மந்திரி பினராயி விஜயன், ‘‘உயர் அதிகாரிகள் அளிக்கும் நெருக்கடிக்கு மாநில அரசு பணிந்து விடாது. இந்த போராட்டம் பொறுப்பற்றது’’ என்றார்.