தமிழ் மக்கள் வாழ்க! கட்ஜூ புகழாரம் !!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

*அவர் வெளியிட்டுள்ள பதிவு:*

தமிழ் மக்கள் வாழ்க!

தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.


இந்த போராட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும் சாதி, மத எல்லைகளை தகர்த்து துணிச்சலுடன் உறுதியாக வெற்றி கண்டுள்ளீர்கள்.

ஒட்டுமொத்த இந்திய மக்களும் உங்களிடமிருந்து பாடம் கற்பார்கள். அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கு தடைகளை தகர்க்க உங்களை முன்னுதாரணமாக எடுத்துகொள்வார்கள்.
தமிழ் மக்கள் வாழ்க!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

*மற்றொரு பதிவு*

அவருடைய மற்றொரு பதிவில் கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தங்களுடைய கலாசாரத்தில் ஒருபகுதியாக உள்ள கம்பாலா போட்டி, எருது பந்தயம் ஆகிய போட்டிகளை நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...