ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வந்த பிறகு, கடன் தொகையை திரும்ப செலுத்த ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக அளித்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான பிறகு வங்கி கணக்கில் குவிந்த டெபாசிட் விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. ஆபரேஷன் கிளீன் மணி திட்டம் மூலம் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின்படி, 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இவர்களில்,
கடன் தொகையை ரொக்கமாக செலுத்தியவர்கள் விவரங்களையும் வருமான வரித்துறை திரட்டி வருகிறது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் கூறியதாவது:
சந்தேகத்துக்கு இடமாக 18 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளை படிப்படியாக ஆராய வேண்டும். குறிப்பாக, பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, கடன் தொகை ரொக்கமாக செலு த்தியிருந்தால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக, அதாவது ₹20 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தி கடன் அடைக்கப்பட்டிருந்தாலோ, பகுதி கடன் தொகையாக செலுத்தியிருந்தாலோ அதற்கு வருமான வரி சட்ட விதிகளின் படி அதே அளவு அபராதம் விதிக்கலாம்.
₹20,000 அல்லது அதற்கு மேல் கடன் தொகை ரொக்க மாக செலுத்தியிருந்தால், அதற்கான ஆதாரங்கள் கேட்டு விசாரணை நடத்த வேண்டும். அதேநேரத்தில், விவசாய வருவாய் போன்ற இதர வருவாயில் இருந்து கடன் தொகை ரொக்கமாக செலுத்து போன்ற சில இனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக பணத்தை வங்கி பரிவர்த்தனைக்கு மாற்றியதை கண்டறியவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.