ஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

மொபைல் தொலைப்பது என்பது சின்ன வயதில் பென்சில் தொலைத்ததின் பரிணாம வளர்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
ஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்து போனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக புது மொபைல் வாங்க நடையைக் கட்டுவது சிலரின் வழக்கம். மொபைலோடு
தொலைந்துபோன தகவல்களை நினைத்து வருத்தப்படுவது சிலரின் வழக்கம். ஆனால் மொபைல் தொலைந்துபோனால் அதைக் கண்டுபிடிக்கவும், அதிலிருக்கும் தகவல்களைப் பாதுகாக்கவும் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க நினைப்பது வெகு சிலர்தான். அதற்கு காரணம், என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாததுதான்.

ஆண்ட்ராய்டு உபகரணங்களைப் பொறுத்தவரை பொதுவாக கூகுளின் 'Android Device Manager' வசம் தான் அனைத்துத் தகவல்களையும் அணுகும் உரிமை இருக்கும். ஒருவேளை அந்த உரிமையை ஸ்மார்ட்போனில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன் ஒன்றை நிறுவும்போது அதற்கு நாம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. 'Android Device Manager' உங்கள் மொபைலின் டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டராக இருக்கும் பட்சத்தில், அந்த மொபைல் தொலைந்தால் ப்ரெளசர் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.
முதலாவதாக, Settings சென்று Security ஆப்சனைத் தேர்வு செய்யுங்கள். அதில் Device Administrators என்ற ஆப்சனின் கீழ் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரைத் தேர்வு செய்யுங்கள். இப்படித் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் இருக்கும் தகவல்களைத் தேவைப்படும்போது அழிக்கவும், ஸ்க்ரீன் லாக் பாஸ்வேர்டை மாற்றவும், ஸ்க்ரீனை லாக் செய்யவும் அனுமதி அளிப்பதாகப் பொருள். ஒருவேளை உங்கள் மொபைல் தொலையும்போது அதிலிருக்கும் அத்தனைத் தகவல்களையும் அழிப்பதற்கும், மொபைல் ஸ்க்ரீன் லாக்கை மாற்றவும் இது உதவும்.
மொபைல் தொலைவதில் இருவகை உண்டு. வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் மறதி காரணமாக நம்மையறியாமல் தொலைப்பது, வெளியிடத்தில் தொலைப்பது / திருடுபோவது என இருவகை உண்டு. மறதி காரணமாக மொபைலை தொலைத்தால் பொதுவாக மிஸ்டு கால் மூலம் கண்டறிவோம். மொபைல் சைலன்ஸ் மோடில் இருந்தால் மிஸ்டு கால் மூலமாக மொபைலைக் கண்டறிவது சிரமம். ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் வழியாக மொபைல் சைலன்ஸ் மோடில் இருந்தாலும் மொபைலை ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை ப்ரெளசரில் இயக்க, மொபைலில் இணைத்திருந்த கூகுள் அக்கவுண்ட்டில் ப்ரெளசர் மூலம் லாகின் செய்து கொள்ளவேண்டும். அதன்பின் ப்ரெளசரில் https://www.google.com/android/devicemanager என்ற முகவரிக்குச் சென்றோ அல்லது கூகுளில் 'Find your Phone' என என்டர் செய்தால் டிவைஸ் மேனேஜரைப் பயன்படுத்த முடியும். தற்போது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் திரையில் தோன்றும்.
சைலன்ஸ் மோடில் உள்ள மொபைலை ஒலிக்கச் செய்ய :

வீடு அல்லது அலுவலகத்தில் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக மொபைலை சைலன்ஸ் மோடில் வைத்திருப்போம். அந்த நேரம் பார்த்து எங்கோ மறதியாக வைத்துவிட்டால் மிஸ்டு கால் கொடுத்துக்கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. மேலே சொன்னபடி ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்தபிறகு, திரையில் தோன்றும் 'Ring' என்ற ஆப்சனை கிளிக் செய்யும்போது, உங்கள் மொபைல் அல்லது டேப் சைலன்ஸ் மோடில் இருந்தால் கூட அதன் டீஃபால்ட் ரிங் டோனில் ஒலிக்கும். இதன் மூலம் மறதியாகத் தொலைத்துவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முடியும். ஆனால் இதைச் செய்வதற்கு உங்கள் மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் இணையத்தோடு இணைந்திருக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிய :
உங்கள் மொபைலில் ஜி.பி.எஸ் எனப்படும் லொக்கேசனை ஆன் செய்திருந்தீர்கள் என்றால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் உள்ள 'Locate Device' என்ற பட்டனை கிளிக் செய்தால், ஸ்மார்ட்போன் தற்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். சமீபத்தில் ஜி.பி.எஸ் மூலமாக மொபைல் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை லொக்கேசன் ஹிஸ்டரி மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். மறதியாகத் தொலைத்திருந்தாலும், திருடுபோயிருந்தாலும் ஸ்மார்ட்போன் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆப்சன் உதவும்.
மொபைலில் உள்ள தகவல்களை அழிக்க :
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். 'மொபைல் போனாக்கூட இன்னொன்னு வாங்கிக்கலாம் பாஸ். ஆனா அதுல இருக்குற டேட்டாவ வேற யாரும் தப்பா பயன்படுத்திடக் கூடாது' என நினைப்பவர்களுக்கு இந்த ட்ரிக் உதவும். தொலைந்துபோன மொபைலில் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்து 'Erase' என்ற ஆப்சனை கிளிக் செய்தால் மொபைலில் இருக்கும் அத்தனைத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும்.
மொபைலை லாக் செய்ய :

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்தபின், 'Lock' ஆப்சனை கிளிக் செய்தால்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...