10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினார்கள். அந்தத் தேர்வு முடிவு, மே மாதம் வெளியானது. இணையத்தில் வெளியான மதிப்பெண் பட்டியலைக்கொண்டு மாணவர்கள் அடுத்த வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள்.
மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், இன்றுமுதல் (ஜூலை 26, புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழ்நாடு கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல 10-ம் வகுப்பு தேர்வை எழுதிய தனித் தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையத்துக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...