குஜராத் மாநிலம் சூரத் ரெயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் முன்பதிவில்லா
ரெயில் டிக்கெட்டுகளுக்கு ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மும்பையில் உள்ள மேற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து மும்பையில் இருந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவத்தன்று சூரத் ரெயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர்களிடம் டிக்கெட் விற்பனை செய்ததைவிட கூடுதல் பணம் கையிருப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் டிக்கெட்டிற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதியானது. இதையடுத்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலித்த சையத், திலிப், வி.எஸ்.பாட்டீல், அபிக்ஷா, அங்கிதா, விஜய், நிதா, அஷிஷ், முன்னி, சிவ்குமார் ஆகிய 10 டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தகவலை மேற்கு ரெயில்வே பொது மேலாளர் முகுல் ஜெயின் உறுதி செய்துள்ளார்