பள்ளிக்குப் பூட்டுப் போட்டு போராட்டம்!!!!

கூடுதல் கழிவறை வசதி வேண்டியும், புதிய இடத்தில் பள்ளிக்

கட்டிடங்களைக் கட்ட வலியுறுத்தியும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மேல் ஒத்திவாக்கம் மக்கள் பள்ளிக்கு பூட்டுப் போட்டுப் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மேல் ஒத்திவாக்கம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இங்கு 170 மாணவர்கள் படித்துவருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகும் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தரவில்லை. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தலா ஒரு கழிவறை மட்டுமே உள்ளன. கூடுதல் கழிவறை கட்டித் தரக் கோரியும், அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக் கோரியும் கல்வித் துறைக்குப் பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பள்ளி வளாகம் இடநெருக்கடியான இடத்தில் உள்ளதால், அங்குக் கட்டடங்கள் கட்டக் கூடாது என்று மக்கள் கூறுகின்றனர். ஊரில் பல இடங்களில் உள்ள புறம்போக்கு நிலத்திலிருந்து இடத்தைத் தேர்வு செய்து விளையாட்டு மைதானம், கூடுதல் கழிவறைகளுடன் பள்ளிக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்குப் பூட்டுப்போட்டு நேற்று (டிசம்பர் 15) பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யும்வரை பள்ளியைத் திறக்கவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறினார்கள். தகவல் அறிந்துவந்த அதிகாரிகள் அடிப்படைவசதி செய்து தருவதாகவும், மாற்று இடத்தில் பள்ளிக் கட்டிடம் கட்டித்தருவதாக வாக்குறுதி கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...