எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு 5ம் தேதி பதிவு முடிவு

எய்ம்ஸ்’ மருத்துவ கல்லுாரியில் சேருவதற்கான
நுழைவு தேர்வுக்கு, நாளை மறுநாள் பதிவு முடிகிறது.


நாடு முழுவதும், அனைத்து அரசு, தனியார்கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மற்றும், ‘ஜிப்மர்’ கல்லுாரிகளில்சேருவதற்கு, தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த ஆண்டுக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 26, 27ல் நடக்கிறது. இதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு, பிப்.,5ல் துவங்கியது.


இந்த பதிவு, நாளை மறுநாள் மாலை, 5:00 மணியுடன் முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை, www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...