தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை தொடங்கியது!


வரவிருக்கும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கல்விக் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியுள்ளன.

சிபிஎஸ்இ பள்ளிகள் தங்கள் கட்டணத்தை 30 சதவிகிதம் உயர்த்தியுள்ள நிலையில், ஸ்டேட் போர்டுடன் இணைக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்த கட்டண நிர்ணயக் குழு அனுமதித்துள்ளது. ஏழாவது ஊதியக் குழு சம்பள உயர்வை நடைமுறைப்படுத்தியதே இந்தக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சென்னை சர்வோதயா பள்ளி வளாகத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கிவருகின்றன. இங்கு கடந்த கல்வியாண்டில் 35,000ஆக இருந்த கல்விக் கட்டணம் இந்த ஆண்டு 45,000ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சென்னை சர்வோதயா பள்ளி வளாகத்தின் ஆலோசகர் அஜீத் பிரசாத் ஜெயின், "ஏழாவது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டதால், சில பள்ளிகள் இந்த ஆண்டு 25% முதல் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 10,000 தனியார் பள்ளிகளுக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரூ.4,500 அளவில் கட்டணக் கட்டமைப்பைத் தீர்மானம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பல்வேறு கல்வி நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.

பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணங்களைத் தவிர்த்து நூலக சேவைகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவற்றிற்குக் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஒரு விதிமுறையாக மாறியுள்ளது. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த முறைகேடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லாதது குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முகப்பேர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவியின் தாயாரிடம் கேட்டபோது, "பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டத்திற்காக எங்களிடம் ரூ.6000 கேட்டிருந்தார்கள். இந்தத் தொகை சற்று அதிகமாகத் தோன்றியதால் குறைவான தொகையை என் மகளிடம் கொடுத்து அனுப்பினேன். ஆனால் பள்ளி ஆசிரியையோ குறைந்தது 5000 ரூபாயாவது கொடுக்கவேண்டும் என்று என் மகளிடம் கட்டாயப்படுத்தியுள்ளார்" என்று மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் செயல்முறைத் தேர்வின்போது மதிப்பெண்களைக் குறைத்துவிடுவோம் என்று ஆசிரியர்கள் மிரட்டுவதாக மாணவர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...