தினமும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு!!!

*மணிலா : ரூ 3 ஆயிரம் கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் தினமும்
அச்சடிக்கப்பட்டு வருவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்*

*இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நாட்டில் 85 சதவீத ஏ.டி.எம்.,கள் இயங்குகிறது. கடந்த வாரம் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்ததில் இதில் தெரியவந்தது. நாட்டின் பணப்புழக்கம் வசதியாகவே உள்ளது. தேவையான அளவில் பணம் உள்ளது. பண நெருக்கடி இருப்பதாக தெரியவில்லை*

*2000 ரூபாய் நோட்டுகளை விட 100, 200, 500 ரூபாய் நோட்டுகள், மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வசதியாக உள்ளது. நாள்தோறும் ரூ.2,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...