வெளிநாட்டவருக்கான வாழ்க்கைச் செலவு (cost of living)
அதிகமாக இருக்கும் இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெர்சர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘உலகளவில் ஹாங்காங் நகரம்தான் வெளிநாட்டவர் தங்குவதற்கு அதிகம் செலவாகும் நகரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள நகரமாக மும்பை உள்ளது. சர்வதேச அளவில் இப்பிரிவில் மும்பை 55ஆவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (58), ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபர்ட் (68), அர்ஜெண்டினாவின் பீனோஸ் ஏர்ஸ் (76), ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் (89), ஜார்ஜியாவின் அட்லாண்டா (95) உள்ளிட்ட நகரங்களை விட மும்பையில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய நகரங்களில் டெல்லி (103), சென்னை (144), பெங்களூரு (170), கொல்கத்தா (182) உள்ளிட்ட நகரங்களில் வெளிநாட்டவருக்கான வாழ்க்கைச் செலவுகள் மிகவும் குறைவாக உள்ளன. இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருப்பதற்குப் பணவீக்கம் (5.57%) முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டவரின் முக்கிய உணவுப் பொருட்களான வெண்ணெய், இறைச்சி, கோழி இறைச்சிப் பொருட்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான பிரதான உணவுப் பொருட்களின் விலை இங்கு அதிகமாக இருப்பதால் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக உள்ளன. மதுபானங்களுக்கான விலைகள் அதிகமாக இருப்பதாலும் வெளிநாட்டவருக்கான வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கின்றன.